செல்வராகவன் படத்தில் 2 வேடத்தில் நடிக்கும் தனுஷ்
Share
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘நானே வருவேன்’. இந்துஜா கதாநாயகியாக நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் படத்தின் பர்லுடக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு விதமான கெட்அப்களில் நடிக்கிறார் என்கிற தகவலும் உண்டு. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.













