ஆரி அர்ஜுனன் நடிப்பில் TN43.?! பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு
Share
பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். தமிழில் நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஆரி அர்ஜுனன்.
நெடுஞ்சாலை படம் அவருக்கு பிரபல தன்மையை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 ஆரி போட்டியாளராக கலந்து கொண்டார். மிகவும் மென்மையான கதாபாத்திரமாக ஆரி பிக்பாஸ் வீட்டில் திகழ்ந்தார். நெடுஞ்சாலை படத்தில் ஆரி வேறு மாதிரியான கேரக்டரில் நடித்திருப்பார்.
எனவே ஆரியின் குணம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் மூலம் ஆரிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இந்த ரசிகர்கள் அவரை வெற்றி பெறவும் வைத்தனர். இப்படிப்பட்ட சூழலில் தனது பிறந்தநாளில் புது பட அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். TN43 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை அஞ்சு குரியன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. மணிவர்மன் இயக்க எஸ்ஏஎஸ் ப்ரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.













