LOADING

Type to search

சினிமா

விரைவில் தாயாராகும் கைதி-2. திரைப்படம்

Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

மேலும் கைதி படத்தின் முடிவில் கூட இரண்டாம் பாகம் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அண்மையில், கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதி படத்தின் கதை என்னுடையது என்று கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் தொடரப்பட்ட வழக்கில் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கும், கைதி 2 எடுப்பதற்கும் தடை கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் இந்த கதைக்களம் படமாக்கப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் டிவிட்டரில் Kaithi2 என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகினறனர். ஆனால், தற்போது இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.