LOADING

Type to search

சினிமா

நடிகர் பிரசாந்துக்கு மீண்டும் திருமணம்

Share

கோலிவுட் சினிமாவில் அஜித், விஜய்க்கு நிகரான மிகப்பெரிய நடிகராகப் பார்க்கப்பட்டவர் பிரசாந்த். இவர், ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து ஜீன்ஸ், வண்ண வண்ண பூக்கள், கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் திருடா திருடா போன்ற வெற்றி படங்களில் அவர் நடித்தார். அதன்பிறகு, தமிழ், ஜோடி மற்றும் பின்னர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றி கொடுத்தாலும் நிறைய படங்கள் தோல்வியை தழுவியது.

அவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதால் படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக பிரசாந்த் குறைத்துக்கொண்டார். கடந்த 2005ல் திருமணம் செய்த பிரஷாந்த் மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் மூன்று ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு கூட ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்தார். ஆனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது அந்தாதுன் திரைப்படத்தின் மறுபதிப்புதான் அந்தகன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் யோகி பாபு, ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன், ” அந்தகன் படம் வெளியானவுடன் பிரசாந்துக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. பெற்றோர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த திருமணம் அது.” என்று தெரிவித்துள்ளார்.