31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | அமரர் உயர்திரு சோதிலிங்கம் பரமலிங்கம்
Share
அன்பின் திருவுருவமாக, பாசத்தின் உறைவிடமாக உங்கள் குடும்பத்தின் தீபமாக விளங்கி எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி, மீளாத் துயரில் விட்டுச் சென்ற எங்கள் அன்புத் தெய்வமாகிய அமரர் உயர்திரு சோதிலிங்கம் பரமலிங்கம் அவர்கள் இறைவன் திருவடி எய்திய சோகமான செய்தியைக் கேள்வியுற்று, எங்கள் இல்லம் தேடி வந்து. நேரில் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி வாயிலாகவும், மற்றும் WhatsApp, Viber, Text Message ஆகிய ஊடகங்களின் மூலம் ஆறுதல் நல்லுள்ளங்களுக்கும், மற்றும் உணவு, ஆகாராங்கள், தேநீர் போன்றவற்றை இல்லத்திற்கு கொண்டு வந்து தந்த அன்புள்ளங்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரையாற்றியவர்களுக்கும், இறுதிக் கிரியைகளில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், திருமுறை மற்றும் தேவாரங்களை ஒதியவர்களுக்கும், அனைத்துக் கிரியைகளையும் நடத்திய அந்தணப் பெரியோர்களுக்கும், அமரரது திருவுடலை இலங்கையிலிருந்து கனடாவிற்கு விரைவாக கொண்டுவர ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கும், Chapel Ridge Funeral Home ஊழியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி! –
அமரர் உயர்திரு சோதிலிங்கம் பரமலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த கிரியைகள் மற்றும் பூசைகள் 17-05-2022 அன்று அவரது இல்லத்தில் (இடம்பெற்று பின்னர் எதிர்வரும் 05-06-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை (733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளன. அன்றைய பிராத்தனைகள் மற்றும் மதியபோசனத்திலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
இங்ஙனம் மனைவி, மக்கள், மற்றும் குடும்பத்தினர்
அமரர். உயர்திரு. சோதிலிங்கம் பரமலிங்கம்