LOADING

Type to search

இலங்கை அரசியல்

மடு தேவாலய வளாகத்தில் கடற்படையினரால் புனரமைக்கப்பட்ட ‘ஓய்வு மண்டபம் பொது மக்களின் பாவனைக்காக கையளிப்பு

Share

மன்னார் நிருபர்

(27-11-2026)

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பிரிவின் பங்களிப்புடன் மன்னார் மடு தேவாலய வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ‘ஓய்வு மண்டபத்தின்’ புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, குறித்த மண்டபம் பொது மக்களின் பாவனைக்காக வியாழக்கிழமை (26-11-2026) கையளிக்கப்பட்டது.

மருத மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ் .ஜே .பெப்பி சோசை அடிகளார் ஆசியுடன் , இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

, வடமத்திய கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பங்களிப்புடன், மடு தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதி மற்றும் நலனை கருத்திற்கொண்டு, இந்த ஓய்வு மண்டபம் வெற்றிகரமாகப் புனரமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் இருபது (20) நபர்கள் தங்குவதற்கான வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன, சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவி குணசிங்க, தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மாலன் பெரேரா மற்றும் இலங்கை கடற்படைக் கப்பலான பண்டுகாபய நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் அவந்திக ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்