LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ 45 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பு

Share

(மன்னார் நிருபர்)

(14-09-2022)

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல் முனைவின் 45வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை (14.09.2022) மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தில் றாலோடை கிராமத்தில் நடைபெற்றது.

இச் செயற்றிட்டத்தில் றாலோடை கிராம மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய,மீனவ அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதன் போது நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசோ கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம். எமக்கு வேண்டும் எங்கள் நிலம், ஒன்று கூடு்வது எமது உரிமை, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், போன்ற பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.