தமிழ்நாடு ‘நந்தவனம்’ சந்திரசேகரனுக்கு இலங்கையில் வழங்கப்பெற்ற மொழிக் காவலர் விருது
Share
இலங்கை கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இனிய நந்தவனம் வெள்ளி விழா மலர் அறிமுக விழாவில் கடந்த 25 ஆண்டுகளாத இலக்கியப்பணியும் இதழியல் பணியும் ஆற்றிவரும் இனிய நந்தவனம் இதழின் பிரததசிரியர் நந்தவனம் சந்திரசேகரனுக்கு “மொழிக்காவலர்” என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்

ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார் ஊடகவியலாளர்கள் விரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், தினக்குரல் பிரதம ஆசிரியர் கே.பி.ஆர் ஹரன், தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
உடுவை எஸ்.தில்லை நடராஜன், சாகித்ய ரத்னா முருகன் சிவலிங்கம்
இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் மருத்துவர் ரஞ்சனி சுப்பிரமணியர் ஆண்டு மலர் குறித்து விமர்சனம் செய்ய தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் முனைவர், பூ அ .அன்பு சிவா சிறப்புரையாற்றினார்

முன்னதாக கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் ஆழ்வார் பிள்ளை கந்தசாமி அனைவரையும் வரவேற்க செல்வி இனியவள் காண்டீபன் தமிழ் வாழ்த்து பாட கலைஞானச்சுடர் ஸ்ரீ சுபாஷினி பிரணவன் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்
நிறைவாக நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கலாபூஷணம் பொன்னுதுரை நிகழ்வை ஏற்பாடு செய்து உதவினார்













