LOADING

Type to search

இலங்கை அரசியல்

திலீபனின் நினைவேந்தலுக்கு பொதுக் கட்டமைப்பு

Share

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுக் கட்டமைப்பு குழுவை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்று (19) நடைபெற்றது.

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பொதுக் கட்டமைப்பு குழுவில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.