பலாலி வள்ளுவர் புரத்தில் ராணுவ வீரரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
Share
(23-10-2022)
பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றது.
15 வயது சிறுமி தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்து வீட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டு தப்பித்துள்ளார்.
காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து வழிப்பறி கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.
இலங்கை ராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை பொலிஸார் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூறு கைவிடப்பட்டது.













