LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் ரிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையில் விசேட சந்திப்பு

Share

(மன்னார் நிருபர்)

(08-11-2022)

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்தும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைக்கான உதவிகளை வழங்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் இக்கட்டான பொருளாதார நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியமைக்காக உயர்ஸ்தானிகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.