LOADING

Type to search

கனடா அரசியல்

யாழ்ப்பாணம்- உரும்பிராய்க் கிராமத்தின் சரிதம் என்ற மகுடத்தோடு கனடாவில் வெளியிடப்பெறவுள்ள 634 பக்கங்கள் கொண்ட ‘செம்பாட்டுச் சீமை’ நூல்

Share

யாழ்ப்பாணம்- உரும்பிராய்க் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் இங்கிலாந்து சென்று பொறியியல் துறையில் கற்று பின்னர் பல உயர் தகைமைகளைப் பெற்று தற்போதும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர்தான் எழுத்தாளரும் தமிழ் ஆர்வலருமான எம்.ரி. செல்வராஜா அவர்கள்.

அவர் கடந்த 20 வருடங்களாக தேடிப் பெற்ற அரிய தகவல்கள் மற்றும் உரும்பிராய்க் கிராமத்தின் மைந்தர்கள் பலர் எட்டிய உச்சங்கள் மற்றும் நிலைநாட்டிய சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி கிராமத்தின் சரிதம் என்ற மகுடத்தோடு கனடாவில் வெளியிடப்பெறவுள்ள 634 பக்கங்கள் கொண்ட ‘செம்பாட்டுச் சீமை’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 4.00 மணி தொடக்கம் ஸ்காபுறோ நகரில் இடம்பெறவுள்ளது.

1120 . Tapscott Road, Scarborough M1X 3E8 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘தமிழ் இசைக் கலாமன்றம்’ அமைப்பின் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ் நூல் வெளியீட்டு விழாவில் உரும்பிராய் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட பல பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றார்கள்.

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள பின்வரும் இலக்கங்களை அழைக்கவும்.

விக்னேஸ்வரராஜா —+1 647 625 5199
சிவலோகநாதன்—–+1 416 918 1318
சந்திரலீலா——+1 647 893 8551
சிவலிங்கம்—–+1 416 823 4637
எம்.ரி. செல்வராஜா—+44 739 320 3387