LOADING

Type to search

இலங்கை அரசியல்

மினுவாங்கொடை, பொல் வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் பலி

Share

(18-11-2022)

மினுவாங்கொடை, பொல் வத்த பிரதேசத்தில் நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.