சம்பளத்தை ஒரேடியாக இரண்டு மடங்கு உயர்த்திய லவ் டுடே கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன்
Share
ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனைத் தொடர்ந்து அவர் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே கடந்த நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2கே கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு பெரிய பட்ஜெட்டில் உருவான சில திரைப்படங்கள் கூட வசூலில் தடுமாறிய நிலையில், லவ் டுடே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரித்த இந்தப் படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் உருவானதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் 90 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. 2கே கிட்ஸ்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடிய இந்தப் படம், இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கோமாளி, லவ் டுடே என பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசூலிலும் கோமாளி 50 கோடிகளுக்கு மேல் கலெக்ஷன் செய்தது. லவ் டுடே 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இதனால் அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளாராம் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்படி தனது அடுத்த படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டுள்ளாராம்.













