LOADING

Type to search

சினிமா

முதல்வர் ஸ்டாலின்-கமல்ஹாசன் பரஸ்பரம் நன்றி

Share

ஈரோடு தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கும் கமல் முடிவு பற்றி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

“நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கமல் பதில்

இதற்கு “ஒன்று கூடுவோம்” என்று கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

இதுபற்றி கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,”ஒன்று கூடுவோம் மு.க.ஸ்டாலின். வென்று காட்டுவோம், ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழ்நாடு வாழ்க!” என்று தெரிவித்துள்ளார்.