LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தானில் பேருந்து-வேன் மோதலில் 12 பேர் பலியானார்கள்

Share

பாகிஸ்தானில் பேருந்தும், வேனும் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கே, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உதல் பகுதியின் குவெட்டா-கராச்சி நெடுஞ்சாலையின் அருகே சென்றபோது, எதிரே கராச்சியிலிருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கராச்சியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சீர் செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டனர்.