LOADING

Type to search

இலங்கை அரசியல்

சிறப்பாக இடம் பெற்ற மன்னார்/தோட்ட வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி-2023

Share

(7-03-2023)

மன்/தோட்ட வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை(7) மதியம் 1.30 மணி அளவில் பாடசாலை முதல்வர் .F.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.A.ஸ்ரான்லி டி மெல் , சிறப்பு விருந்தினர்களாக ஜோசப் வாஸ் நகர் பங்குத்தந்தை அருட்பணி.S.இராஜநாயகம் அடிகளார் ,தோட்ட வெளி பங்குத்தந்தை அருட்பணி.K.ரெரன்ஸ் குலாஸ் அடிகளார், தோட்டவெளியில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் சின்னஞ்சிறிய அருட்சகோதரிகளும், ஜோசப் வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டு கழக பொருளாளர் திரு.F.கிங்சிலி, L.S.R. கடலுணவு வாணிப உரிமையாளர் . R.றொயிற்ரன் , தோட்டவெளி கிராம சேவகர் , , கெளரவ விருந்தினர்களாக மன்னார் வலய கல்வி பணிமனையின் கோட்டக்கல்வி அதிகாரி திரு.P.சந்தியோகு , முசலி உதவி பிரதேச செயலாளர் செல்வன்.P.டியூசன் பயஸ் , விடத்தல் தீவு மன்/தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அதிபர் J.கியோமர் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பாடசாலையில் கடந்த மாதங்களில் இடம் பெற்ற போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்சிகளும் இடம் பெற்றது.

அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது அதே நேரம் இறுதி நாள் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கேடயங்களும் விருந்தினர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.