LOADING

Type to search

சினிமா

வீட்டிற்கே வந்து ஹோட்டலுக்கு கூப்பிட்டார் – நடிகர் சரத்குமாரின் மகள்வரலட்சுமி

Share

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், சிலம்பரசன் நடித்த ‘போடா போடி’ படத்தில் நடித்தன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்கார், சண்டக்கோழி பாகம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் நேற்று ( மார்ச் 5 ) தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை சென்னை எழும்பூரில் உள்ள ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடினார். ஜாய் ஆஃப் ஷேரிங்’ என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்தது.

இதனையடுத்து பிறந்தநாளை முன்னிட்டு வரலட்சுமி ரசிகர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ” டிவி சேனல் தலைவர் ஒருவர் வீட்டிற்கு வந்து ஒரு ஷோ பற்றிப் பேசினார். எல்லாம் சரியாக இருந்தது. பிறகு கிளம்பும் முன்பு மற்ற விஷயங்களுக்காக நாம் எப்போது ஹோட்டலில் மீட் செய்யலாம்? என நேரடியாகக் கேட்டார்.

இது போன்று யாராவது கேட்டால் நான் உடனே அடித்துவிடுவேன். ஆனால் இந்த முறை நான் அடிப்படி செய்யவில்லை. ஏனென்றால் என் வீட்டிற்கே வந்து இது போன்று கேட்கும் நபர், மற்ற பெண்களிடம் எப்படி நடந்து கொள்வார் என யோசித்தேன்.

அதற்கு பிறகு வழக்கறிந்தார்களிடம் பேசினேன். இது போன்ற விஷயங்களுக்கு வழக்கு பதிவு செய்தால் பல வருடமாகும். அதனால் எல்லோரிடமும் மயிலா நீதிமன்றம் அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என கையெழுத்து வாங்கி டெல்லி சென்று பார்த்தோம். அதற்கு பிறகு தான் சேவ் சக்தி தொடங்கினோம் ” என்றார்.