LOADING

Type to search

கனடா அரசியல்

‘FRONTLINE COMMUNITY CENTRE in Scarborough presented a successful 2 day event to honor Covid-19 Heroes, at Markham Fairgrounds

Share

ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் சேவை நிறுவனமான ‘FRONTLINE COMMUNITY CENTRE நடத்திய இரண்டு நாள் வெற்றிகரமான விழா HONORING OUR HEROES

திருமதி விஜயா குலா அவர்களை நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கொண்டு ஸ்காபுறோ நகரில் கடந்த எட்டு வருடங்களாக சிறப்பாக இயங்கிவரும் சேவை நிறுவனமான ‘FRONTLINE COMMUNITY CENTRE நடத்திய இரண்டு நாள் வெற்றிகரமான விழா HONORING OUR HEROES- கடந்த சனி ஞாயிறு ஆகிய தினங்களான 25ம் 26ம் திகதிகளில் Markham Fairgrounds உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு நாட்களும் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெற்ற இந்த இரண்டு நாள் பெருவிழாவில் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர்கள்; நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு விழா ஏற்பாட்டாளர்களை வாழ்த்திச் சென்றனர்.

இரண்டு நாட்களும் வர்த்தகச் சாவடிகள் இயங்கிவர உணவங்களும் அங்கு நிறுவப்பட்டிருந்தன. அத்துடன் கலை நிகழ்ச்சிகளும் தென்னிந்தியாவிலிருந்து கலந்து கொண்ட பாடகர் வி. என். மகாலிங்கம் அவர்களோடு இணைந்து பாடல்களை வழங்கிய கனடியப் பாடக பாடகிகள் சபையோரை மகிழ்வித்தனர்