LOADING

Type to search

சினிமா

சூர்யா 42 படத்தின் தலைப்பு மற்றும் புதிய தகவல்

Share

இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்கிறார்.

பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இது 2டி மற்றும் 3டியில் வெளியாகிறது. ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் உள்ளது. சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் தயாராகிவிட்டதாகவும், அதனை அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டிகளில் கூறி இருந்தார். அதன்படி இப்படத்தில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட் வரும் 16ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே படத்துக்கு ‘வீர்’ அல்லது ‘அக்னீஸ்வரன்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொருத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக வி சென்ட்டிமெண்டை கடைபிடிக்கும் இயக்குனர் சிவா இப்படத்திற்கு பெயரை மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது