LOADING

Type to search

சினிமா

விடுதலை படம் குறித்து பேசிய வெற்றிமாறன்

Share

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வெளியாகி வெற்றி அடைந்திருக்கும் விடுதலை திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக் குழுவினர்கள் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜு மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ”நல்லவர்களை கதை நாயகர்களாக பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நாங்களும் அது போன்ற திரைப்படங்களை எடுக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்லவர்களை கதை நாயகனாக கொண்ட இந்த திரைப்படத்தை வெற்றியடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

விடுதலை திரைப்படத்தின் முதலில் பார்த்து இது பெரிய திரைப்படம், அனைவரும் கொண்டாடும் படமாக வரும் என இளையராஜா பாராட்டினார். அவருக்கு மிகக் குறைந்த நாட்களே இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தேன். இருந்தபோதிலும் மிகச் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார், அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெற்றிமாறன் கூறினார்.