LOADING

Type to search

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | திருமதி. திருச்செல்வம் நாகேஸ்வரி

Share

(ஆசிரியர் – புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை)

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்த செய்தியை அறிந்து நேரிலும் தொலைபேசி மூலமாகவும், எம் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து சென்றவர்களுக்கும், பின்னர் இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலர்வளையங்களை அனுப்பிவைத்தவர்களுக்கும், உணவு மற்றும் உபசாரங்களை செய்தவர்களுக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கிய அனைவருக்கும் எமது குடும்பங்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் அனைவரும் எங்கள் வாழ்வில் உயர அப்பாவிற்கு அருகில்
நின்று எம்மை அணைத்து வளர்த்த அன்னையை பிரிந்த துயர்
இன்னும் ஆறவில்லை. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்றாகவே இருக்கப்போகின்றது அம்மா!
கற்ற கல்வியோடு நற்பண்புகளை ஊட்டி வளர்த்து எம்மை உயர வைத்து
பாரினில் பரந்து புகழொடு வாழ வழி சமைத்த அம்மாவே
நீங்கள் எம்மோடு இல்லாது மறைந்த நாட்தொடக்கம்
வெறுமையை உணருகின்றோம். வெந்து வாடுகின்றோம் ஒருபோது
பிரியாத ஒரு உள்ளத்தை இழந்தது எம்வாழ்வில் பெரியதோர் இடியென அதிர்ந்தோம் அம்மா…

எங்கள் வளமான வாழ்விற்கு வழிகாட்டிய அப்பாவிற்குத் துணையாகவும் எம்மிடத்தில் அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த அன்னையே! உங்கள் ஆத்மா இறைவனின் திருவடிகளைச் சென்றடைய புளியங்கூடல் மகாமாரி அம்பிகை அருள்புரிய வேண்டுகின்றோம்.

மேலும் எமது அன்புக்குரியவரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் எதிர்வரும் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளன. தொடர்ந்து 07-05-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம் 733 Birchmount Road, Scarborough, ON M1K 1R5 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள எமது அன்புக்குரியவரின் நினைவஞ்சலிப் பிரார்த்தனைகளிலும் தொடர்ந்து நடைபெறவுள்ள மதிய போசனத்திலும் பங்கெடுத்து ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.!

இவ் அழைப்பை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஈசன் – மகன்: ரஜனி மகள்: கலா – மகள்:

தொடர்புகளுக்கு:

ஈசன் – மகன் : (416) 996-8542
ரஜனி – மகள் : (416) 833-8963
கலா – மகள் : (289) 380-1526

புஸ்பா – மகள் : (647) 667-0479
நளினி – மகள் : (416) 738-9198
சியாமலா – மகள்: (647) 773-9996