LOADING

Type to search

சினிமா

பழம்பெரும் மலையாள நகைச்சுவை நடிகர் மாமு கோயா காலமானார்

Share

மலையாள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மாமு கோயா(76). நாடக நடிகர், கடந்த 1979ல் அன்ருடே பூமி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம்,மழவில் காவடி உள்பட 450-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் காளிகாவு என்ற இடத்தில் ஒரு கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்றார். தற்போது திடீரென மாமு கோயா மயக்கம் போட்டு விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

உடனடியாக அவரை கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று (ஏப் 26) மாலை அவரது உயிர் பிரிந்தது.