LOADING

Type to search

சினிமா

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியீடு திகதி அறிவிப்பு

Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த அயலான் திரைப்படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்று நாளை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த பதிவேற்றமும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்ளிடையே கேள்வி எழுந்தது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம். அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படம். அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இறுக்கும். படம் முழுவதும் வரும் வேற்று கிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4500க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு வழியாக இந்தப் படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. முன்னதாக சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான மாவீரன் படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.