அயோத்தி பட நடிகையுடன் இணையும் நடிகர் கவின்? – வெளியான புதிய பதிவேற்றம்
Share
பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் கவின் அடுத்ததாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிறிய கதையாக இருந்தாலும் புது கோணத்தில் எடுக்கப்பட்டதால் டாடா திரைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. தற்போதைய சூழலில் இருக்கும் ஓர் இளைஞனின் பின்னணியில் டாடா திரைப்படத்தின் கதை எழுதப்பட்டது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெற்று கவனம் ஈர்த்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள் பலரும் கவின் நடிப்பிற்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
திரையரங்கில் வெற்றியடைந்தது மட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடன ஆசிரியர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் அடுத்ததாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்தப் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் கவின் அடுத்ததாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.













