கஸ்டடி படத்தில் இளையராஜாவோட யுவன் – கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி
Share
கஸ்டடி படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நடித்தது குறித்து கீர்த்தி ஷெட்டி பேசினார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க அரவிந்த் சாமி, சரத்குமார், வெண்ணிலா, கிஷோர், பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி அளித்த பேட்டியில், என்னுடைய உப்பெனா படத்திலிருந்து தமிழ் ரசிகர்கள் ஆதரிக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது ஃபன்னாக இருக்கும்.













