மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்.. லால்சலாம் பதிவேற்றம்!
Share
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடைய காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 படமான ஜெயிலரில் நடித்து வந்தார். அதை முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படக் குழுவினருடன் இணைகிறார். லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர்.
அதற்கான சுவரொட்டியை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் மும்பை பின்னணியில் இஸ்லாமிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் எனவும் பதாகையில் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எனவும் பதிவிட்டுள்ளனர்.













