நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார்
Share
நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. கடந்த 1977-ம் ஆண்டு ‘பட்டினப் பிரவேசம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. தொடர்ந்து ‘நிழல் நிஜமாகிறது’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர், ரஜினிகாந்தின் ‘வேலைக்காரன்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’ ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக, ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஜீப்பை ஓட்டிக்கொண்டே நடிகர் சரத்பாபு பாடிய ‘செந்தாழம் பூவில் வந்து ஆடும் தென்றல்’ பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்த அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குவைறால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது சமூகவலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.













