LOADING

Type to search

சினிமா

‘இந்தியன் 2’ படத்தில் சம்பவம் செய்யும் அனிருத் – பாடலை ரசித்து கேட்கும் ஷங்கர்

Share

இந்தியன் 2 படத்துக்காக அனிருத் இசையமைக்க, அதனை இயக்குநர் ஷங்கர் ரசித்து கேட்கும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை ஷங்கர் இயக்கி வருகிறார். இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடன் மட்டுமே பணியாற்றிய ஷங்கர் முதன்முறையாக கேம் சேஞ்சர் படத்துக்காக இசையமைப்பாளர் தமனுடனும், இந்தியன் 2 படத்துக்காக அனிருத்துடனும் இணைந்துள்ளார்.

கடந்த 9 ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் உச்சகட்ட காட்சி படமாக்கிய ஷங்கர், அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். விக்ரம் படத்துக்கு பிறகு அனிருத்தும் கமல்ஹாசனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்துக்கு அனிருத் வந்திருக்கிறார். அப்போது கேரவனில் அனிருத் பாடலை இசைக்க, அதனை ஷங்கர் ரசித்து கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.