LOADING

Type to search

சினிமா

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் ஜப்பான்?

Share

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பதாகைகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் 25 நாள் படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.