LOADING

Type to search

சினிமா

திருப்பதியில் ஆதிபுருஷ் திரைப்பட விழா ஏற்பாடு மும்முரம்

Share

ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ள திரையரங்குகளின் முன் இருக்கையில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘ஆதிபுருஷ்’ பட விழா இன்று இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் ‘ஆதிபுருஷ்’ கதாநாயகன் பிரபாஸ் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு நடிகர் பிரபாஸ் மற்றும் பட குழுவினர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் திருப்பதிக்கு வந்தனர். நேற்று இரவு திருமலைக்கு வந்த நடிகர் பிரபாஸுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, பிரபாஸ் அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.