திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சனோன்
Share
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ் . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.













