LOADING

Type to search

சினிமா

உதயநிதியுடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன்

Share

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான பின்னணி குரல் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் ‘மாவீரன்’ தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.