LOADING

Type to search

சினிமா

மீண்டும் வருகிறார் டிஜிபி ராகவன்

Share

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் மறுவெளியீடு ஆகவுள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.