LOADING

Type to search

இந்திய அரசியல்

‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கொண்டுவருவதா? – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Share

தேசிய மருத்துவ தகுதித் தேர்வை கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, நெக்ஸ்ட் தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிக கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வை தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.