ஜாமீன் கோரி மனு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி
Share
அரசு ஓமாந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மின்சார வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிர்வரும் ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனை அடிப்படையில் இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்புகள் இருப்பதாகவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை இயக்குனர் பரிந்துரை செய்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியை எதிர்வரும் 28ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து ,அமலாக்கத் துறையில் வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும், இந்த மனுவில் தன்மீதான நீதிமன்றக் காவலை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.













