LOADING

Type to search

இந்திய அரசியல்

‘மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது’ – சோனியா காந்தி கவலை

Share

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன .

சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

வன்முறையால் மணிப்பூர் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலையை பார்த்து வருத்தப்படுகிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மணிப்பூர் மக்கள் மீது எனக்கு நம்பிக்கையும் உள்ளது, இந்த சோதனையை நாம் ஒன்றாக சமாளிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.