சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் புதிய பதிவேற்றம்
Share
சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் வெளியீடு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை படக்குழு குரளொலி மூலம் தெரிவித்துள்ளது.
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. குறிப்பாக, படத்தொகுப்பு வேலைகளை முடித்த இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது பின்னணி பணிகளை தொடங்கியுள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு தன்னுடைய காட்சிகளுக்கான வசனத்தை பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தின் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் மாவீரன் படத்தின் பின்னணி பணிகளை முடித்துக் கொடுக்க தற்போது அவர் மும்மரம் காட்டி வருகிறார்.
மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்நிலையில் மாவீரன் படத்தின் வெளியீடு நிகழ்ச்சி வருகிற ஜூலை 2ம் தேதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.













