LOADING

Type to search

இந்திய அரசியல்

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: திற்பரப்பு- கோதையாறு இரட்டை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது

Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழை பெய்யாததால் வரட்சி நிலவியது. இதனால் நீரோடைகள் வறண்டு போன நிலையில் ஆறுகளிலும் தண்ணீர் வற்றியது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளுகுளு சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அங்கு நீரூற்றுகள் துளிர் விட்டுள்ளன. அவை நீரோடைகளாக பெருக்கெடுத்து மலைகளில் பாய்ந்து ஓடுவதால் சிறு சிறு அருவிகளும் உருவாகியுள்ளன.

அவை காட்டு விலங்குகளுக்கு தாகத்தை தீர்ப்பதுடன் மலையில் உற்பத்தியாகும் முக்கிய
ஆறுகளான கோதையாறு, பரளியாற்றில் இணைகின்றன. இதனால் கோதையாற்றின் வெள்ளநீர் குலசேகரத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதேபோல் கோதையாறு அறிவு மற்றும் இரட்டை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர். இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோதையாறு சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.