LOADING

Type to search

இந்திய அரசியல்

ஈபிஎஸ்-க்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு மீண்டும் விசாரிக்கப்படும் – லஞ்ச ஒழிப்புத்துறை

Share

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான, நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் குறித்த வழக்கில் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிர்ந்த்து 800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. தொடர்ந்து, ஈ.பி.எஸ் மீது குற்றமில்லை என சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை என்றும், இதுதொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் எனவும் ஈ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் 13ஆம் தேதி ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.