LOADING

Type to search

சினிமா

மாமன்னன்’ ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!

Share

மாமன்னன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த இப்படத்தை அவரின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரித்தது. கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். மாமன்னன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்தார். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகள் கொண்டதாக அமைந்தன. அந்த வரிசையில் மாமன்னன் படமும் தனது வெற்றியை பதிவு செய்தது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று பதாகை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது.