LOADING

Type to search

உலக அரசியல்

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்

Share

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், மியான்மரின் ராகினி, கரினி மாகாணங்களில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.