LOADING

Type to search

இந்திய அரசியல்

அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் – ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்

Share

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டில்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 05:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.