LOADING

Type to search

இந்திய அரசியல்

மீண்டும் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்… மணிப்பூர் பெண்கள் மௌனம் காப்பது ஏன்?

Share

மிக மிக மோசமாக மனித தன்மையற்ற முறையில் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘நான் பாதிக்கப்பட்டேன்’ என்று சொல்வதற்குகூட மறுக்கும் அளவுக்கு அவர்களை தடுத்தது எது என்பதை அவர்கள் தரப்பில் நாம் உணரவேண்டியுள்ளது.

மணிப்பூரில் மெய்தி சமூக மக்களுக்கும் குக்கி சமூக மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் ஏற்பட்ட மோதல், தொடர் வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்து வருகிறது. இதில் தற்போது வரை 120-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 5,000 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அம்மாநில அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கலவரங்களும் மக்களிடையே நிகழும் மோதல்களும் முடிவுக்கு வராத நிலையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் கடந்த மே 4-ம் தேதியே நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், காணொளியில் காணப்படும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.