LOADING

Type to search

இந்திய அரசியல்

இந்தியாவின் கோடீஸ்வரர் டி.கே.சிவகுமார்: ரூ.1413 கோடி சொத்துக்கள் வைத்துள்ளார்

Share

நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள். இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ.வும், துணை முதல்-அமைச்சருமான டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.