வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கமல்
Share
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘புராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் காணொளி காலை வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு ‘கல்கி 2898- ஏடி’ என படக்குழு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிம்ப்ஸ் காணொளி வெளியிட்டுள்ளது. மேலும் இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் கமலின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.













