LOADING

Type to search

சினிமா

நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் – மின்சாரம் தாக்கி 2 ரசிகர்கள் மரணம்

Share

சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 2 ரசிகர்கள் பலியான சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை மண்டலத்தில் உள்ள யாக்களவாரி பாளையம் கிராமத்தில் அதிகாலை அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் சுவரொட்டிகளை கட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு சுவரொட்டி ஒன்று மின்சார வயர் மீது உரசி மின்சாரம் பாய்ந்து வெங்கடேஷ் (வயது 19 ), சாய் (20) ஆகிய ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறை விரைந்து சென்று மரணம் அடைந்த ரசிகர்கள் இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.