நடிகர் யோகிபாபு பிறந்தநாள் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நேரில் வாழ்த்து
Share
நடிகர் யோகிபாபு பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் நடராஜன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யோகி பாபு தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் சேலத்தை சேர்ந்த வருமான நடராஜன் யோகி பாபு இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யோகி பாபு மற்றும் நடராஜன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். சமீபத்தில், நடராஜன் தன்னுடைய சொந்த கிராமத்தில் திறந்த கிரிக்கெட் மைதானத்தை விழாவில் யோகி பாபு கலந்து கொண்டார். மேலும் அவருடன் கிரிக்கெட் விளையாடிய காணொளி வெளியாகி வைரலானது. இந்த நிலையில் யோகி பாபுவின் பிறந்தநாளுக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தவிர, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் சென்று நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.













