LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அரிச்சல்முனையில் அகதிகளாக தஞ்சம்

Share

பு.கஜிந்தன்

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இலங்கை வவுனியா பகுதியில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் தனுஷ்கோடிக்கு அடுத்த அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிசார் அவர்களை மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.