LOADING

Type to search

சினிமா

இயக்குநர் பாரதிராஜாவை பாட்டுபாடி நெகிழவைத்த கவிஞர் வைரமுத்து

Share

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவை நேரில் சந்தித்த கவிப் பேரரசு வைரமுத்து, தனது கவிதையின் மூலம் அவரை நெகிழவைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இமயம் இயக்குனர் பாரதிராஜா. இவரது படைப்புகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

16 வயதினிலே, கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, என எண்ணில் அடங்கா படைப்புகள் மூலம் மக்கள் மனதில் தனக்கான இடத்தை நங்கூரமாய் இன்றளவிலும் தக்க வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக கருதப்படும் பாரதிராஜாவுக்கு தற்போது 82 வயது. வயது மூப்பு காரணமாக அவ்வப்போது அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தற்போது பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவை நேரில் சந்தித்த கவிப் பேரரசு, தனது கவிதையின் மூலம் அவரை நெகிழவைத்துள்ளார்.

அதில், “உங்கள் உடல் நலம் தெரிவித்தது என்பதை உங்கள் முகம் சொல்கிறது, உங்களுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை கொண்டுவந்துள்ளேன். அதை கேட்டு நீங்கள் ஆனந்தமடைய வேண்டும்’ என்று கூறி தென்பாண்டி சீமையிலே பாடலின் வரிகளை பாரதிராஜாவின் வாழ்வுக்கு ஏற்றபடி மாற்றி வைரமுத்து பாடினார்.

இந்த பாடலை கேட்ட பாரதிராஜா, வைரமுத்துவின் வரிகள் தம்மை தேற்றிவிற்றதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழவே காணொளியில் “எழுந்து வா இமயமே” என்ற பெயரில் வைரமுத்துவே தனது கீச்சக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்துவின் இந்த காணொளி இணையத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது.